விளையாட்டுத்துறை அமைச்சர் நீதிமன்றிற்கு விசேட அறிவித்தல்!

112

 

விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்து வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்தப் போவதில்லை என புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (13) மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவிற்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட மனு இன்று அழைக்கப்பட்ட போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த மனு விசாரணையை தொடருவதா? இல்லையா? என்பது தொடர்பில் அறிவிப்பதற்காக எதிர்வரும் 15ம் திகதி வரை மனு விசாரணையை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

SHARE