- 2008ம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 31 பேர் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு ஆகஸ்டு மாதம் நடக்கும் ரியோடி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டிக்கு தடைவிதிக்கப்படும் என்று தெரிகிறது.
- ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் அதிரடி காட்டி வரும் கோஹ்லி, டிவில்லியர் ஆகியோரை பேட்மேன்- சூப்பர்மேன் என்று சக வீரரான கிறிஸ் கெய்ல் பாராட்டியுள்ளார்.
- இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு டிராவிட் பொருத்தமானவர் என்று முன்னாள் அவுஸ்திரேலிய தலைவர் பொண்டிங் கூறியுள்ளார்.
- இத்தாலி ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா- சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
- பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா இமாலய ஓட்டங்கள் குவித்தும் தோற்றது. இந்த நிலையில் ஆடுகளம் சரியில்லை என்று கொல்கத்தா அணியின் சகலதுறை வீரர் சாகிப் அல் ஹசன் புலம்பியுள்ளார்.