
டாப்சி
தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத்துக்கு வந்தவர் டாப்சி. காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்தார். தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அமிதாப்பச்சனுடன் நடித்த பிங்க் மற்றும் நாம் சபானா, பட்லா, மிஷன் மங்கள் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தன.
கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை கதை உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்து நடித்து வருகிறார். டாப்சிக்கு தற்போது 32 வயது ஆகிறது. இவர் வெளிநாட்டை சேர்ந்த விளையாட்டு வீரரை காதலித்து வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. இதற்கு பதில் சொல்லாமல் இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒருவரை காதலிக்கிறேன் என்றும், அவரை பற்றிய விவரத்தை சொல்ல முடியாது என்றும் கூறியிருந்தார்.
