விவசாயிகளின் பிரச்சினைக்காக வீதியில் உட்கார்ந்த அரசியல்வாதி! போராட்டம் வெற்றி

273

 

மொனராகலை மாவட்ட விவசாயிகளுக்கு உரிய முறையில் விவசாய உரங்கள் பெற்றுக் கொள்ள முடியாததைக் கண்டித்து சமந்த வித்தியாரத்ன விவசாயிகளுடன் வீதியில் உட்கார்ந்து போராடியுள்ளார்.

மொனராகலை மாவட்டத்தின் ரிதீமாலியத்தவில் நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இங்குள்ள அரசாங்க களஞ்சியத்தில் விவசாய பசளைகள் போதுமான அளவு கையிருப்பில் இருந்தபோதும் அவை உரிய முறையில் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவில்லை.

மிகவும் பின்தங்கிய பிரதேசம் என்பதால் அப்பகுதியில் வேறு வர்த்தகர்களும் உரம் விற்பனை வர்த்தகத்தில் ஈடுபடவுமில்லை. இதன் காரணமாக விவசாயிகளின் பயிர்ச்செய்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.

இதனைக் கண்டித்தும், அரசாங்க களஞ்சியத்தில் இருந்து விவசாயிகளுக்கு உரிய முறையில் பகிர்ந்தளிக்க வற்புறுத்தியும் விவசாயிகளுடன் இணைந்து ஜே.வி.பி. மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன வீதியில் உட்கார்ந்து எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தார்.

இதற்கு எதிராக பொலிஸார் நீதிமன்றம் சென்று வீதியை மறித்துப் போராட்டம் நடத்துவதற்கு எதிராக தடையுத்தரவு பெற முயன்ற போதும் அவர் அசைந்து கொடுக்கவில்லை.

கடைசியில் மாவட்டச் செயலாளரின் தொலைநகல் உத்தரவுக்கு அமைய விவசாயிகளுக்கு உரவகைகள் விநியோகம் ஆரம்பமான பின்னரே சமந்த வித்தியாரத்ன சம்பவ இடத்தை விட்டு அகன்று சென்றுள்ளார்.

SHARE