
இதனால் குறுகிய காலத்தில் சிறந்த நடிகர் என்று திரையுலகினரையும் ரசிகர்களையும் பேச வைத்து இருக்கிறார். பீட்சா விற்பவராக வந்த பீட்சா, ஞாபக மறதி உள்ளவராக நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், ரவுடி கதாபாத்திரம் ஏற்ற சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடிதான் ஆகிய படங்கள் அவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.
தர்மதுரையில் டாக்டராகவும் சேதுபதியில் போலீஸ் அதிகாரியாகவும் வந்தார். இப்போது சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், 96, செக்க சிவந்த வானம், ரஜினியுடன் பேட்ட, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. செக்கச்சிவந்த வானம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வருகிறது.
சீதக்காதி படத்தில் வயதான விவசாயியாக வருகிறார். மேலும் பல தோற்றங்களிலும் நடிக்கிறார். இந்த படத்தை பாலாஜி தரணிதரன் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த நிலையில் வேட்டி–சட்டையில் விவசாயியாக வரும் விஜய் சேதுபதியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.