விவசாய அமைச்சின் சில பொறுப்புக்கள் ராஜாங்க அமைச்சிடம் ஒப்படைப்பு

144

duminda

விவசாய அமைச்சின் சில பொறுப்புக்கள் ராஜாங்க அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, தமது அமைச்சின் சில பொறுப்புக்களை விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹரேயிடம் ஒப்படைத்துள்ளார்.

ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆய்வு நிலையம் மற்றும் பயிற்சி நிலையம், இலங்கை விவசாய ஆய்வு கொள்கைச் சபை மற்றும் அறுவடையின் பின்னரான தொழில்நுட்ப நிறுவனம் ஆகியனவே இவ்வாறு ராஜாங்க அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் தங்களது விடயங்களை ராஜாங்க அமைச்சர்களுடன் பகிர்ந்து கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இது தொடர்பில் ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறான ஓர் நிலையில் விவசாய அமைச்சின் சில பொறுப்புக்களை துமிந்த திஸாநாயக்க இவ்வாறு ராஜாங்க அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE