விவசாய வேலை செய்வோம், இல்லாவிட்டால் தொலைக்காட்சியில் விஜய் படம் பார்ப்போம். இப்படி ஒரு மக்களா?

243

Kaavalan-19_110121

கேரளாவில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களுக்கு நடிகர் விஜய்யை தவிர உலகில் நடக்கும் வேறு விடயங்கள் எதுவும் தெரியவில்லை.

கேரளா பாலக்காட்டில் உள்ள அட்டப்பாடி பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்களை பார்வையிடுவதற்காக, துணை மாவட்ட ஆட்சியர் உமேஷ் கேசவன் சென்றுள்ளார்.

அப்பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை, அவர்களுக்கு படிப்பின் மீது அதிக ஆர்வம் கிடையாது. மேலும் உலகில் நடக்கும் முக்கிய விடயங்களை கூட அறிந்துகொள்ளாமல் இருக்கும் இவர்கள், நடிகர் விஜய்யை நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

விவசாய வேலை செய்வோம், இல்லாவிட்டால் தொலைக்காட்சியில் விஜய் படம் பார்ப்போம். இதுமட்டும் தான் எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளனர்.

அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதியுதவி எவையும் இவர்களை சென்றடையவில்லை. இதனால் இம்மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடிகர் விஜய்யை இப்பழக்குடியினர் வசிக்கும் இடத்திற்கு வரவழைப்பதற்காக, அவரின் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளேன் என துணை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

SHARE