விவாகரத்தில் முடிந்த திருமணம்! வாரிசு நடிகருடன் புதிய காதல்.. சமந்தாவின் இரண்டாம் திருமணத்திற்கு மாப்பிளை ரெடி

108

 

நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணம் சில ஆண்டுகளில் விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.

இரண்டாம் திருமணம் என தகவல்
கடந்த சில நாட்களாக நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் உலா வருகிறது. அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இரண்டாம் திருமணத்திற்காக சமந்தாவிற்கு அவரது வீட்டில் இருந்து அழுத்தம் கொடுக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதுகுறித்து உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

வாரிசு நடிகருடன் காதல்?
இந்நிலையில், சமந்தா பிரபல வாரிசு நடிகர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை தான் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வீட்டில் பார்த்த மாப்பிள்ளையா? அல்லது காதலருடன் சமந்தாவிற்கு இரண்டாம் திருமணமா என்று பேச்சு தற்போது வைரலாகி வரும் நிலையில் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை.

இதுகுறித்து சமந்தா பதில் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் சமந்தா தரப்பில் இருந்து வரப்போகும் தகவல் என்னவென்று.

SHARE