தமிழ் சினிமாவை பொறுத்தவரை இன்று வரை தீராத போட்டி என்றால் விஜய்-அஜித் தான். அவர்கள் என்ன தான் நண்பர்களாக இருந்தாலும், அவர்களுடைய ரசிகர்கள் இன்றும் ஒருவரை ஒருவர் சமூக வலைத்தளங்களில் வார்த்தைகளால் தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் விவேகம், மெர்சல் இந்த இரண்டு படங்களுக்குமே எடிட்டர் ரூபன் தான், இவர் சமீபத்தில் விவேகம் ப்ரோமோஷனுக்காக ஒரு சில சேனல்களில் பேட்டியளித்தார்.
அதில் ஒரு பேட்டியில் விவேகம் டீசரை தளபதி விஜய் பார்த்தார், பார்த்த முடித்த அடுத்த நொடி என்னை மிகவும் பாராட்டினார்.
மேலும், காதலாட பாடலை கேட்ட அட்லீ இயக்குனர் சிவாவிற்கு போன் செய்து தன் பாராட்டை தெரிவித்தாராம்.
விஜய்-அஜித் அவர்கள் டீமிற்குள் எப்போதும் ஒற்றுமை தான், ஆனால், ரசிகர்களிடம் தான் என்றும் பகை நீடிக்கின்றது.