அஜித்தின் விவேகம் படம் வேறலெவலில் தயாராகி வருகிறது. படப்பிடிப்பின் போது வந்த அஜித்தின் சில புகைப்படங்கள் ரசிகர்களை அப்படியே வாய் பிளக்க வைத்திருக்கிறது. அந்த அளவிற்கு அந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்திருந்தது.
அண்மையில் வெளியான சர்வைவா பாடல் யூடியூபில் பல சாதனைகளை செய்து வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ஒரு பாடலுக்காக கிடார் வாசித்து முடித்திருப்பதாகவும், அந்த பாடல் மிகவும் செமயான டிராக் பெற்றிருப்பதாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் கெபா ஜெரிமியா (Keba Jeremiah).
அதோடு ஜுன் 19ம் தேதி சர்வைவா பாடலின் முழு பாடலும் வெளியாக இருப்பதாக ஏற்கெனவே படக்குழு தெரிவித்துவிட்டனர்.