அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நபர் ஒருவர் தன் சொந்த ஊரான நாகப்பட்டினத்திற்கு வந்துள்ளார்.
அங்கு விவேகம் படம் முதல் நாள் பார்த்துக்கொண்டிருந்த போது, மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
உடனே ரசிகர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க, அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட, பிறகு அந்த பகுதி காவல் துறையினர் இதுக்குறித்து விசாரித்து வருகின்றனர்.