விவேகம் படத்தை எதிர்நோக்கி அஜித் ரசிகர்கள் அனைவரும் காத்திருந்தனர். எல்லோருமே ஆகஸ்ட் 10-ம் தேதி தான் படம் வெளிவரும் என்று காத்திருந்தார்கள்.
ஏனெனில் படக்குழுவே அதை தான் முடிவு செய்திருந்தது, ஆனால், கடைசியில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, படம் ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் ஆகஸ்ட் 10-ம் தேதி ரிலிஸ் ஆகியிருந்தால் ஒரு வாரம் விடுமுறை என்பதால் நல்ல வசூல் பார்த்திருக்கலாம்.
ஆகஸ்ட் 24-ம் தேதி தமிழகத்தில் நல்ல வசூல் வரும் என்றாலும், கேரளாவில் அடுத்த ஒரே வாரத்தில் 5 மலையாள படங்கள் ரிலிஸாகின்றது.
இதனால், கேரளாவில் விவேகம் படத்தின் வசூல் பெரும் பாதிப்பு அடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.