விஷமான தேநீர்: அறுவர் வைத்தியசாலையில்!

277
இரத்தோட்டை, ஹாலேகொட்டுவ வத்த பகுதியில் தேநீர் விஷமானத்தில் 13 வயது சிறுவன் மற்றும் பெண்ணொருவர் உட்பட அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

tea2_2121501g

மேற்படி சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுகவீனமுற்றவர்கள், இரத்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மாத்தளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இரத்தோட்டைப் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

SHARE