விஷாலுடன் இணைந்த வரலட்சுமி

277

சமீபத்தில் பெய்த பேய் மழையில் சிக்கி தவித்த மக்களுக்கு பல தரப்புகளிலிருந்து உதவிகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நடிகர்கள் தங்கள் சார்புக்கு நன்கொடை கொடுத்த வண்ணம் உள்ளனர்.

இது ஒருபுறமிருக்க நடிகர் சங்க செயலாளர் விஷால் தனது பங்குக்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவி செய்து வருகிறார். இவருடன் அவரது காதலியாக கிசுகிசுக்கப்படும் வரலட்சுமியும்ஒன்றாக இணைந்து உதவிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட கசப்புணர்வால் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாக விஷால் வெள்ள நிவாரண பணிகளில் வரலட்சுமியும் களத்தில் இறங்கி வேலை செய்வது அனைவரையும் கவர்ந்து வருகிறது.

SHARE