விஷாலுடன் காதல் இல்லை – வரலக்ஷ்மி

182

நடிகர் விஷால் மற்றும் நடிகை வரலக்ஷ்மி ஆகியோர் காதலித்து வருவதாக கடந்த பல வருடங்களாகவே கிசுகிசு உள்ளது. நாங்கள் நண்பர்கள் தான் என அவர்கள் எப்போதும் மழுப்பலாக பதில் கூறி வந்தனர்.

இந்நிலையில் தற்போது வரலக்ஷ்மி சரத்குமார் அளித்துள்ள பேட்டியில் விஷாலுடன் காதல் இல்லை என உறுதியாக தெரிவித்துள்ளார்.

“நடிகர் விஷால் எனக்கு நெருக்கமான நண்பர். எல்லா வி‌ஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொள்வோம். ஆனால் அவரும் நானும் காதலிப்பதாகவோ, டேட்டிங் செல்வதாகவோ வரும் தகவல்களில் உண்மை இல்லை.”

“விஷாலுக்கு திருமணத்திற்கு பெண் பார்த்தால் நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க தயார். அவர் திருமணம் செய்தால் மகிழ்ச்சியடையப் போவதும் நான்தான். எதற்காக விஷாலுடன் என்னை இணைத்து பேசுகிறார்கள் என்பதுதான் புரியவில்லை,” என வரலக்ஷ்மி கூறியுள்ளார்.

SHARE