விஷால் என்றாலே குற்றமாகிவிட்டது – ராதாரவி

338

நடிகர் சங்கத் தேர்தல் தற்போது பரபரப்பாக தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வருகிறது. கோவை சினிமா நடனம், நாடக, நடிகர்கள் சங்கம் என்ற புதிய சங்கத் தொடக்க நிகழ்ச்சி கோவையில் நடந்தது. இதை தொடங்கி வைப்பதற்காக கோவை சென்ற ராதாரவி, நடிகர் சங்கத் தேர்தலை பற்றி கூறியுள்ளார்.

நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகு தேர்தல் நடைபெரும். கருணாநிதியின் ஓட்டு உரிமையை பறித்து விட்டதாகக் கூறுகிறார்கள்.

கருணாநிதி கௌரவ உறுப்பினர், அவருக்கு ஓட்டு உரிமை கிடையாது. ஆனால் அவருடைய ஓட்டு உரிமையைப் பறித்து விட்டதாக விஷால் குற்றம் சொல்கிறார். இதேபோல நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்று விஷால் குற்றம் சாட்டுகிறார்.

அதுவும் தவறான தகவல். இப்படி விஷால் என்றாலே குற்றம் என்றாகிவிட்டது.

நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு வராதவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று ராதாரவி தெரிவித்தார்.

SHARE