புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அரசு அறிக்கை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் சில உறுப்பினர்களால் இது தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விஷ ஊசி ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களின் உத்தியோகபூர்வ அறிக்கையினை பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.