இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்துக்கொள்ளப்படவுள்ள பொருளாதார உடன்படிக்கையின் விளைவுகள் குறித்து ஆராயப்படவேண்டும் என்று சர்வதேச வர்த்தகத்துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தகத்துறை முன்னாள் பணிப்பாளரான பி டி பெர்ணான்டோ இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த உடன்படிக்கை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி நாட்டின் ஏற்றுமதியை பாதிக்கக்கூடுமா என்பது குறித்தும் ஆராயப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அது குறித்த தெளிவாக ஆராயப்படவேண்டும் என்று பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையை பொறுத்தவரை, உத்தேச இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையானது, முதல்முறையாக இலங்கையால் செய்துக்கொள்ளப்படும் பாரிய உடன்படிக்கையாக இருக்கும்.
எனவே அது குறித்து விரிவாக ஆராயப்படவேண்டியது அவசியம் என்றும் பெர்ணான்டோ கூறியுள்ளார்.