விஸ்வரூபம் எடுத்த ஹிரித்திக் ரோஷன்-கங்கனா ரணவத் சண்டை

288

விஸ்வரூபம் எடுத்த ஹிரித்திக் ரோஷன்-கங்கனா ரணவத் சண்டை - Cineulagam

நடிகர்கள் காதல் பற்றிய வதந்திகள் வருவது ஒன்றும் புதியதல்ல. இன்றைய நடிகர்கள் யாரும் அதை பெரிதாக எடுத்துகொள்வதும் இல்லை.

ஆனால் நடிகர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் கங்கனா ரணவத் ஆகியோரின் காதல் பற்றிய வதந்தி இப்போது ஒரு பூதாகரமான பிரச்சனையாக வெடித்துள்ளது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில், “ஹிரித்திக் என்னுடைய முன்னால் காதலர்” என கங்கனா சொன்ன ஒரே காரணத்தை காட்டி அவருக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பிவிட்டார் ஹிரித்திக் ரோஷன்.

கிரிஷ் 3 படத்தில் ஒன்றாக நடித்ததை தவிர, அவருடன் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்எ கூறியுள்ள ரோஷன். இருவருக்கும் உண்மையிலேயே தொடர்பு இருப்பதுபோல கங்கனா பேசியுள்ளதாக கூறி, அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என கேட்டுள்ளார்.

“மன்னிப்பு கோர முடியாது!, உங்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கபடும்” என கங்கனா அனுப்பிய பதில்தான் இதில் ஹைலைட்.

ஒரு வதந்தி இவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறியது பாலிவுட்டில் அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது.

SHARE