வி.சி.துரையின் படத்தில் ஹீரோவாகும் விஜய் ஆண்டனி

117
அஜித் பட இயக்குனருடன் இணைந்த விஜய் ஆண்டனி

அஜித், ஜோதிகா நடிப்பில் வெளியான முகவரி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் வி.சி.துரை. இதையடுத்து இவர் விக்ரம் நடித்த காதல் சடுகுடு, சிம்பு நடித்த தொட்டி ஜெயா, பரத் நடித்த நேபாளி, ஷியாம் நடித்த 6 கேண்டில்ஸ், அதுல்யா நடித்த ஏமாலி போன்ற படங்களை இயக்கினார்.
இவர் இயக்கியுள்ள இருட்டு படம் வருகிற அக்டோபர் 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் இயக்குனர் சுந்தர் சி ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் வி.சி.துரை அடுத்ததாக இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வி.சி.துரைமேலும் சிம்புவை வைத்து தொட்டி ஜெயா படத்தின் 2-ம் பாகம் எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
SHARE