உரிய வீசா அனுமதியில்லா 12000 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருப்பதாக உள்விவகார மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
வீசா இன்றி சுமார் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இலங்கையில் சட்டவிரோதமாக முறையில் தங்கியிருக்கின்றனர்.
சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் பிரஜைகளே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் அதிகளவில் தங்கியிருக்கின்றார்கள்.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டவர்கள் தங்கியிருக்க அனுமதியில்லை.
இந்த அனைவரையும் கைது செய்து கூடிய விரைவில் நாடு கடத்த நடவடிக்கை எடுக்க்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
இந்த வெளிநாட்டவர்களில் அதிகமானவர்கள் சுற்றுலா வீசாக்களின் மூலம் இலங்கை வந்தவர்களாவர்.
வீசா காலம் பூர்த்தியானதன் பின்னா நாட்டில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர் என தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.