
எல்ல பொலிஸ் பிரிவின் உடகும்பல்வெல என்ற இடத்தின் வீடொன்றில் இருந்த தங்க நகைகள் 27ஆம் திகதி; இனந்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்பட்டது.
தங்க நகைகள், பணம் உட்பட எட்டு இலட்சத்து இருபத்திரண்டாயிரம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக, பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்கள் வசமிருந்த மோட்டார் சைக்கிளொன்றும், ஆட்டோவொன்றும் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட வாகனங்களும் திருடப்பட்டவைகளென்று முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன் கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும் பணத்தில் ஒரு பகுதியும் மீட்கப்பட்டிருப்பதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டிருப்பவர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.