வீட்டின் புனரமைப்பு தேவைகளுக்காக 860 சீமெந்து பைக்கற்றுக்கள் வழங்கிவைப்பு

178
வீட்டின் புனரமைப்பு தேவைகளுக்காக 860 சீமெந்து பைக்கற்றுக்களை மாகாணசபை உறுப்பினர் அகிலதாஸ் சிவக்கொழுந்து வழங்கியுள்ளார். கரவெட்டி தெற்கு மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானங்களை பெறும் 26 குடும்பங்களுக்கு 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான சீமெந்து பைக்கற்றுகள் (31.05.2018) வழங்கப்பட்டுள்ளன.
  
  
கட்டவேலி கரவெட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்க கிளையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் தவிசாளர், செயலாளர் அ.வினோராஜ் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
SHARE