
ஒரு டேபிள்ஸ்பூன் வாஸ்லைனை மைக்ரோ ஓவனில் வைத்து உருகவைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதனை குளிரவைத்து உதட்டில் தடவி வரலாம்.
தேங்காய் எண்ணெயுடன் கற்றாழையை சேர்த்தும் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் மற்றும் தேன் மெழுகு கலந்து கொள்ளவும். அதனை மைக்ரோ ஓவனில் வைத்து நன்றாக உருகவிடவும். பின்னர் அதனை சிறிய பாட்டிலில் அடைத்து குளிரவைத்து உதட்டில் தடவி வரலாம்.
வாணலியில் தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மெழுகு, தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்றாக கிளறவும். அவை அனைத்தும் உருகி ஒன்றாக கலந்ததும் இறக்கி பாட்டிலில் அடைத்து குளிரவைத்து உதட்டுக்கு பயன்படுத்தலாம்.
ஒரு டேபிள்ஸ்பூன் தேன் மெழுகை வாணலியில் உருக்கி அதனுடன் அதே அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும். இந்த கலவையில் லாவண்டர் எண்ணெய் 10 சொட்டுகள் ஊற்றி நன்றாக கலக்கவும். அதனை பாட்டிலில் ஊற்றி குளிரவைத்தும் உதட்டுக்கு உபயோகிக்கலாம்.