வீட்டில் அதிகமான மூட்டைப்பூச்சி தொல்லையா? இதோ வழி

227

625-500-560-350-160-300-053-800-748-160-70-1

நமது வீட்டின் படுக்கை அறையில் மூட்டைப்பூச்சிகளின் தொல்லைகள், நமது நிம்மதியான தூக்கத்தைக் கெடுக்கும்.

இந்த மூட்டை பூச்சிகளின் தாக்கத்தால், நமது உடம்பில் அரிப்புகள் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டு சரும பிரச்சனைகளுக்கு ஆளாகின்றோம்.

நமது வீட்டில் ஒரு மூட்டைப் பூச்சிகள் இருந்தால் அது பலமடங்கில் பெருகும் தன்மை கொண்டது.

இதனால் மூட்டைப் பூச்சி விஷங்களின் தாக்கமானது பன்மடங்குகள் அதிகரிக்கும்.

எனவே இந்த மூட்டைப் பூச்சிகளின் தாக்கத்திலிருந்து விடுபட சூப்பரான டிப்ஸ் இதோ

புதினா இலை

புதினா இலையானது மூட்டைப் பூச்சிகளின் விரட்டியாகப் பயன்படுகிறது. ஏனெனில் மூட்டைப் பூச்சிகளுக்கு புதினா இலைகளின் வாசைகள் ஆகவே ஆகாது.

எனவே இந்த புதினா இலைகளை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் தூங்கும் படுக்கை அரையில் வைத்து விட்டால் மூட்டைப் பூச்சிகளின் தாக்கம் இருக்காது.

மிளகாய் பொடி

மிளகாய் பொடி எரிச்சல் தரும் வகையில் உள்ளதால், இது ஒரு மூட்டைப் பூச்சி விரட்டியாகச் செயல்படுகிறது.

எனவே இந்த மிளகாய் பொடியை மூட்டைப் பூச்சிகள் இருக்கும் இடத்தில் தூவி விட வேண்டும். இதனால் மூட்டைப் பூச்சிகள் உடனே அழிந்து விடும்.

ரோஸ்மேரி

லாவெண்டரை போலவே வாசனைத் தரக்கூடிய ரோஸ்மேரியின் வாசனையை மூட்டைப் பூச்சிகளால் தாங்கிக் கொள்ள முடியாது. எனவே ரோஸ்மேரி ஸ்ப்ரேவைப் பயன்படுத்தி மூட்டைப் பூச்சிகளை அழிக்கலாம்.

பீன்ஸ் இலை

பூச்சிகளை விரட்டுவதற்கு பழமையான காலங்களில் இருந்தே பீன்ஸ் இலைகள் பயன்படுத்தப் படுகிறது. பீன்ஸ் இலையில் இருக்கும் ரோமங்கள் மூட்டைப் பூச்சிகளைக் கொள்வதற்கு உதவுகின்றது.

வேப்ப எண்ணெய்

வேப்ப எண்ணெயானது, பல நுண்ணிய உயிரினங்களை அழிக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பியாக செயல்படுகிறது.

எனவே இந்த வேப்ப எண்ணெயை கொண்டு ஸ்ப்ரே செய்தால், மூட்டைப் பூச்சிகளை விரைவில் அழிக்கலாம்.

வசம்பு

ஸ்வீட் ப்ளாக் என்று அழைக்கப்படும் மூலிகை வகையைச் சேர்ந்த வசம்பானது, ரசாயனம் சார்ந்த பூச்சிக் கொல்லியை அழிக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

எனவே இதனைக் கொண்டு மூட்டைப் பூச்சிகளையும் அழிக்கலாம்.

மேலும் வீடு – தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

SHARE