பெருங்காயம் என்பது ஃபெருலா அசஃபோடிடா செடியின் வேர்கள் மூலம் பெறப்பட்ட ஓர் ரெசின் ஆகும்.
வேர்களிலிருந்து வெளிவருகிற சாறு கெட்டியாகி பெருங்காயமாக மாறுகிறது. இது கசப்பான சுவை மற்றும் விரும்பத்தகாத மணம் கொண்டது.
மேலும் உணவில் பெருங்காயத்தை பயன்படுத்துவதன் முக்கிய நோக்கம் வாயு, வாய்வு, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான நோய்களைத் தடுப்பதற்குதான்.
சீரான செரிமானம் நடைபெற
- பெருங்காயம் மிக்கிய பயன்களில் ஒன்று உடலில் நல்ல செரிமானத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதை தினமும் சமைக்கும் உணவில் சேர்ப்பதா உணர்ச்சியைக் கிளறிவிடும் தடுப்பானாகவும் ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாகவும் உள்ளது.
- சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்து பருகினால் உடலில் ஏற்படும் செரிமானப் பிரச்சனைகளான வயிற்று வலி, வாயு, குடல் புழுக்கள், வயிற்றுப் பொருமல், எரிச்சல் ஏற்படுத்தும் குடல் புண்கள் போன்றவற்றை குணப்படுத்த உதவகிறது.
மாதவிடாய் பிரச்சனை போக்க
- பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் போன்ற அனத்திற்கும் பெருங்காயம் நிவாரணம் அளிக்கின்றாது.
- பெண்ணுறுப்பில் அடிக்கடி ஏற்படும் புண்களுக்கும், வெண் கசிவுகளுக்கும் சிறந்த மருந்தாகவும் விளங்குகிறது.
ஆண்மை குறைவு சரிசெய்ய
- ஆண்களுக்கு ஏற்படும் பெரிய பிரச்சனைகளில் ஒன்று ஆண்மை குறைவு. இதனை சரிசெய்ய பெருங்காயம் மிகவும் உதவுகின்றது.
- தினமும் பெருகயத்தை ஆண்கள் உணவில் சேர்த்து கொள்வதினால் அது ஆண்களின் ஆண்மை குறைவை குணப்படுத்தி ஆண்மையை தூண்டும் பாலுணர்வூக்கியாக விளங்குகிறது.
சுவாச பிரச்சனையை குணப்படுத்த
- பெருங்காயம் ஒரு சுவாச உந்தியாக செயல்பட்டு உடலில் உள்ள சளி நீக்கி நெஞ்சு அடைத்தல் நிவாரணியாகவும் செயல்படுகிறது. மேலும் சுவாச குழாய் புண்களுக்கு பயன்படுத்தப்பட்ட பழமையான மருந்து பெருங்காயம்.
- பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.
உயர் இரத்த அழுத்தம் குறைக்க
- பெருங்காயத்தில் உள்ள கவ்மரின் என்ற பொருள், இரத்தத்தை மெலிவூட்டி இரத்த உறைதலை தடுக்கும். இதன் உறைவெதிர்ப்புத் தன்மை மற்றும் குணப்படுத்தும் ஆற்றல் இரத்தக் கொழுப்பைக் குறைத்து உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
புற்று நோய் குணப்படுத்த
- பெருங்காயம் மிகச்சிறந்த ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்பட்டு, உடம்பின் அணுக்களை பாதுகாத்து உடலில் புற்றுநோயை உண்டாக்கும் அணுக்கள் வளருவதை தடுக்கின்றன.
சரும நோய்கள்
- நாம் பயன்படுத்தும் பல சரும பாதுகாப்பு பொருட்களில் பெருங்காயத்தின் மருத்துவ குணங்கள் இருப்பதால், சரும சிகிச்சைக்கு உகந்ததாக இது விளங்குகிறது. இதை சருமத்தின் மேல் நேரடியாக தடவினால், தோல் தடிப்பு மற்றும் தோல் காய்ப்பு நீங்கும்.
எச்சரிக்கை
- வெப்பத்தை அதிக அளவு உணரக்கூடியவர்கள் பெருங்கயத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் பெருங்காயம் மிகவும் சூடான ஆற்றலைக் கொண்டுள்ளதால் இது இரைப்பை அழற்சியின் வரலாறு, எரித்தல், வெப்ப உணர்தல் அல்லது இரத்தப்போக்கு குறைபாடுகள் போன்றவை ஏற்படலாம்.
- கர்பப காலத்தில் பெண்கள் பெருங்காயம் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்கவும். ஏனெனில் பெருங்காயம் உள்ள ஹிங் கருப்பை சுருக்கங்களை ஏற்படுத்தும் அதனால் கருச்சிதைவு ஏற்படலாம்.
- இரத்தக் கசிவு அல்லது மெதுவாக இரத்தம் உறைதல் போன்ற செயல் முறைகளைப் பெருங்காயம் அதிகரிக்கலாம். நீங்கள் அறுவை சிகிச்சைக்குக் குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர், உணவில் பெருங்காயம் சேர்த்துக் கொள்வதை நிறுத்திக் கொள்வது நல்லது.