யாழ்ப்பாணம் பண்ணைப் பாலப் பகுதியில் வீதியைக் கடக்க முற்பட்ட ஒருவரை வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிததனர்.
யாழ்ப்பாண நகரப் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதியான தனபால் (வயது-45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துளளார்.
இந்நிலையில். இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் பண்ணைப் பாலப் பகுதியில் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு குறித்த சாரதி வீதியைக் கடக்க முற்படடுள்ளார்.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலிருந்து ஊர்காவற்றுறை நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் அவரை மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயநித்த ஒருவர் பாலத்தினுள் தூக்கி வீசப்பட்டுக் காயமடைந்தார். வீதியைக் கடக்க முற்பட்ட சாரதி உயிரிழந்தார் – என்று குறிப்பிட்டுள்ள பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.