வீதிகளில் நடமாடிய கட்டாக்காலி மாடுகள்:வவுனியா நகரசபை எடுத்துள்ள நடவடிக்கை

104

 

8 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு வவுனியா நகரசபை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளன.

வவுனியா பண்டாரிக்குளம், வைரவர் புளியங்குளம், மற்றும் நகர மத்தி ஆகிய பகுதிகளில் இருந்தே நேற்று (11.03.2024) இரவு குறித்த மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்டப்பணம்
அத்துடன், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதிகளில் நடமாடியதால் இந்த மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா நகரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், குறித்த மாடுகளின் உரிமையாளர்கள் 2 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தினை நகரசபைக்கு செலுத்தி அவற்றை மீளவும் பெற்றுக் கொள்ளமுடியும் எனவும் நகரசபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE