வெகு சிறப்பாக இடம்பெற்ற வட கொழும்பு தமிழ் கலை விழா

257

வட கொழும்பு தமிழ் கலை விழாவானது லங்காசிறியின் ஊடக அனுசரணையில் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது கொழும்பு – 15 முகத்துவாரம் நாவலர் மணி மண்டபத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எஸ்.துரைராஜ் தலைமையில் இடம்பெற்றது.

அத்துடன், இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக அமைச்சர் மனோகனேஷன் கலந்துகொண்டிருந்தார். கால் நூற்றாண்டுக்கு மேல் தமிழ் கலை, கலாசார, இலக்கிய, சமூக பணியாற்றிவரும் தமிழ் சமூக பற்றாளர்கள் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், இதன் போது சாந்தி கணேசராஜாவின் “நிருத்ய நர்த்தனாலயம்” மாணவிகள் வழங்கிய சிறப்பு நடன நிகழ்சிகளும் இடம்பெற்றன. இதேவேளை, குறித்த நிகழ்வில் லங்காசிறி ஊடக நிறுவனத்தின் இலங்கை அலுவலக முகாமையாளரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE