நடிகர் தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படத்தின் தீம் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் இருந்து ‘பொல்லாத பூமி’, ‘கத்திரி பூவழகி’ என்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்த சிங்கிள் குறித்து ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார். அதில் அசுரனில் தீம் பாடல் ‘இரத்த பாதை வா எழுந்துவா’ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் விரைவில் வெளியாகவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்திரைப்படம் ஒக்டோபர் 4ம் திகதி வெளியாகவுள்ளது.
பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷின் அசுரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். ‘கொடி’ படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்து வருகின்றார்.
தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.