வெடிகுண்டு மிரட்டல்… விடிய விடிய தூங்காமல் பீதியில் நடிகை குஷ்பு

199

நடிகை குஷ்பு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக மர்ம நபர் போன் செய்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. பிரபல நடிகை குஷ்பு சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இதனிடையில், நேற்று இரவு தேனாம்பேட்டை பிரிவு 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்துக்கு மர்ம போன்கால் ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் நடிகை குஷ்புவின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு போனை கட் செய்துள்ளார்.

உடனே இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கபட அவர்கள் உடனே குஷ்புவின் வீட்டுக்கு விரைந்தார்கள். அங்கு நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்து, வெடிகுண்டு இருப்பதாக போன் செய்த மர்ம நபர் குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

SHARE