வெடித்து சிதறிய ரியல் மீ புதிய மொடல் ஸ்மார்ட் போன்! வெளியான புகைப்படங்கள்

310

 

ரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்.டி. ஸ்மார்ட்போன் மற்றொரு யூனிட் வெடித்து சிதறிய சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட்போன்கள் வெடித்து தீப்பிடிக்கும் சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. இதனால் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் ஹார்டுவேர் தரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்த நிலையில், ரியல்மி எக்ஸ்.டி. ஸ்மார்ட்போன் மற்றொரு யூனிட் வெடித்து சிதறிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதமும் ரியல்மி எக்ஸ்.டி. ஸ்மார்ட்போன் ஒன்று வெடித்து சிதறியது. தற்போது வெடித்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்களை பாதிக்கப்பட்ட நபர் டுவிட்டரில் பதிவிட்டார்.

SHARE