வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

148

கிரிபத்கொட, நாஹேன பகுதியில் முச்சக்கர வண்டியில் இருந்து வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

40 வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE