வெண்கடுகின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?

362
சமையலுக்கு பயன்படுத்தும் கருப்பு கடுகை பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் அறிந்திருப்போம்.ஆனால், வெண்கடுகை பற்றி அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கடுகைப்போலவே இதிலும் ஏராளமான மருத்துவகுணங்கள் நிறைந்துள்ளன.

வெண்கடுகை சாம்பிராணி போடுவது போன்று புகைக்க செய்து வீடு முழுவதும் பரவசெய்தால் நோய்கிருமிகள் அழிந்துவிடும்.

வெண்கடுகை பயன்படுத்தி கருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்ககூடியதும், செரிமாணத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.

வெண்கடுகை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் வெண்கடுகு பொடி, ஒரு சிட்டிகை மிளகு, சிறிது உப்பு, 2 சிட்டிகை பெருங்காய பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இதை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 முதல் 100 மிலி வரை எடுத்துக்கொண்டால், இது செரிமானத்தை தூண்டும். கருப்பை கோளாறுகளை சரிசெய்யும்.

மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும். கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைத்து, கருப்பைக்கு பலம் தரக்கூடியது.

வெண்கடுகை பயன்படுத்தி கெண்டைக்கால் தசையில் வீக்கம், வாயுக்கான மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் விளக்கெண்ணெய்யில், ஒரு ஸ்பூன் வெண்கடுகு பொடியை வறுக்கவும்.

பின்னர், நீர்விட்டு கொதிக்க வைத்து, அரிசி மாவு சேர்த்து களி பதத்தில் தயாரிக்கவும். இந்த களியை மெல்லிய துணியில் தடவி வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைக்க வேண்டும். இதனால் வலி, வீக்கம் சரியாகும்.

SHARE