வவுனியா மண்ணில் முதல் முறையாக பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்குத் தெரிவாகியிருந்த மாணவி கோசியா திருமேனன் அவர்கள், இந்தியாவின், டெல்லியில் நடைபெற்ற 40 கிலோ எடை பிரிவில் பங்கேற்று, மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், இன்றைய தினம் குறித்த மாணவி கல்வி பயிலும் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய பாடசாலைச் சமூகம் இம் மாணவியையும், பயிற்றுவிப்பாளரையும் கௌரவிக்கும் முகமாக விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.