வெண்கலப் பதக்கம் வென்ற யுவதிக்கு புதிய வீடு பரிசு

136

இளையோர்ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற யுவதிக்கு பரிசாக வீடு வழங்கி வைக்கப்ட்டுள்ளது.

சிலாபம் பிரதேசத்தில் வசிக்கும் பாரமி வசந்தி மரிஸ்டெல்லாவுக்கு புதிதாக பூரணத்துவம் பெற்ற வீடு ஒன்றை அமைப்பதற்காக இன்று முதற்கட்ட பணிகளுக்கான காசோலை பா.உ சாந்த சிசிர குமார அபேசேகர அவர்களால் கையளிக்கப்பட்டது.

கடந்த நாட்களில் இளையோர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற குறித்த யுவதியை கௌரவிக்கும் முகமாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாரமியின் வீடு புதிதாக கட்டத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஆரம்பகட்டப் பணிகளுக்கான காசோலையே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

SHARE