ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற கூலி தொழிலாளிக்கு ஆனந்த் மஹிந்திரா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
வெண்கல பதக்கம்
இந்திய மாநிலம், உத்தரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் பாபு. இவருடைய தந்தை கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர்.
இவருடைய தந்தை வேலையான கூலி தொழிலை ராம் பாபுசெய்து வந்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையான 100 நாள் வேலைக்கு சென்று தினசரி சம்பளம் பெற்று வந்துள்ளார். மாதத்திற்கு 3000 ரூபாய் முதல் 3500 மட்டுமே இவரால் பெற முடியும்.
ஆனாலும், இவரது தடகள கனவை நிறைவேற்றுவதற்கு உணவகங்களில் சர்வராகவும் பணிபுரிந்துள்ளார். தற்போது, சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் வென்று வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் இன்ப அதிர்ச்சி
இந்நிலையில், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் 107 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. பின்பு, இந்தியா திரும்பிய வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பல தனியார் நிறுவனங்கள் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஆசிய போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற ராம் பாபுவுக்கு பரிசு ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது, அவர் மஹிந்திரா கார்களில் இருந்து தனக்கு விருப்பமான கார்களை தேர்வு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார்.
மேலும், அவருக்கு தன்னுடைய ஆதரவை வழங்குவதாகவும், அவரின் பயணத்திற்கு பாராட்டுகளையும் ஆன்ந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.