
சொரி, சிரங்கு, படை, வெண்புள்ளி போன்ற தோல் நோய்களை குணமாக்க கார்போக அரிசி பெரிதும் உதவுகிறது.
கார்போக அரிசி (Psoralea corylifolia) என்பது ஆயுர்வேத, சித்த, சீன மருத்துவங்களில் முக்கியத்துவம் வகிக்கும் ஒரு தாவரம், இதன் விதைகளே அதிக பலன்களைத் தருகின்றது.
இந்த தாவரம் நேராக நிமிர்ந்து வளரும் செடி, பல கிளைகளுடன், வட்டமான இலைகளையும், சிறிய நீல ஊதா வண்ண பூக்களையும், கரிய நிறத்தில் பழங்களையும் கொண்டிருக்கும்.
கார்போக அரிசியை பயன்படுத்துவது எப்படி?
- ஒரு டம்ளர் அளவுக்கு நீரை எடுத்து கொண்டு அதனுடன் 1/2 ஸ்பூன் கார்போக அரிசி பொடி, 1/4 ஸ்பூன் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், வெண்புள்ளி, வெண்குஷ்டம், சொரி, சிரங்கு போன்ற தோல்நோய்கள் குணமாகும்.
- தேங்காய் எண்ணெய்யை எடுத்து அதனுடன் கார்போக அரிசி பொடி, பாதாம் பருப்பு பொடி, மஞ்சள் பொடி ஆகியவை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி மேல்பூச்சாக பயன்படுத்தினால் சொரியாசிஸ் குணமாகும். அதுவே தலையில் தேய்த்து குளிப்பதன் மூலம் பொடுகு தொல்லைகள் நீங்கும்.
- கார்போக அரிசி, பாதாம் பொடி, கசகசா ஆகியவற்றை கலந்து, அதனுடன் பால் சேர்த்து கலந்து அதை தோல்நோய்கள் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். இதனால் அரிப்பு, சொரி, படை, சிரங்கு, வெண்புள்ளி வியர்வை நாற்றம் போன்றவை குணமாகும்.