கசப்பான ருசியைக் கொண்ட வெந்தயக் கீரையை பெரும்பாலானோர் உணவில் சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்து விடுவார்கள்.
ஆனால் இந்த வெந்தயக் கீரையில் எண்ணில் அடங்காத மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?
வெந்தயக் கீரையின் மருத்துவ நன்மைகள்
- வெந்தயக் கீரையை தொடர்ந்து உணவுப் பழக்கத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தின் பிரச்சனைகள் குறையும்.
- வெந்தயக் கீரையோடு, நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக்கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து, அதனுடன் சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.
- கபம் சளித் தொல்லைகள் அதிகமாக உள்ளவர்கள் வெந்தயக் கீரை தினமும் சமைத்து சாப்பிட்டு வந்தால், விரைவில் குணமாகிவிடும்.
- எப்போதும் மந்தநிலையை உணர்பவர்கள் அல்லது உடல் சோர்வாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால், அது உடலின் செயலாற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
- வெந்தயக் கீரையை தொடர்ந்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கண் தொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளை தடுத்து, கண்பார்வை அதிகரிக்க உதவுகிறது.
- நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்களுக்கு, வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும், ஏனெனில் இது நரம்பு தளர்ச்சியில் இருந்து விடுபட உதவுகிறது.
- வயிற்று வலி, உப்புசமாக உணர்தல், வயிற்று எரிச்சல், இது போன்ற வயிறு சார்ந்த கோளாறுகளை குணமாக்க வெந்தயக் கீரை உதவுகிறது.
- உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள், வெந்தயக் கீரையை சாப்பிடலாம். ஏனெனில் இது உடல் சூட்டை குறைத்து, குளிர்ச்சியாக்க உதவுகிறது.
- தினமும் வெந்தயக் கீரையை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் மார்புவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் காணலாம்.