வெனிசுலாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒரு கொலம்பிய பிரஜை, மூன்று பதின்ம வயதினர் உள்ளடங்களாக 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் மேற்கு டுருஜிலோ மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்தவர்களை வெளியே வருமாறு அழைத்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இனந்தெரியாத நபர்கள் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுள்ளனர்.
வன்முறைச் சம்பவங்களினால் வெனிசுலாவில் அதிகளவான உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.