வெறும் 11 நாளில் சர்க்கரை நோயை வென்றவர் சிறப்பு பதிவு..!!

254

உலகளவில் சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரையும் அச்சுறுத்த தொடங்கிவிட்டது சர்க்கரை நோய்.

வாழ்க்கை சூழலுக்கு ஏற்றவாறு உணவை அதிவேகமாக எடுத்துக் கொள்வது சர்க்கரை நோய்க்கு மிக முக்கிய காரணமாகும்.

சர்க்கரை நோயாளிகள் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது மிக அவசியம், இவர்களுக்கு மத்தியில் வெறும் 11 நாளில் சர்க்கரை நோயை விரட்டியடித்த நபரை பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஆம் பிரித்தானியாவை சேர்ந்த ரிச்சர்ட் டவுடி என்பவரே இப்பெருமைக்கு சொந்தக்காரர்.

அப்போது அவருக்கு வயது 59, ரிச்சர்ட்டுக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தவுடன் பதறிப்போனாராம்.

காரணம் அவர் சிகரெட் புகைப்பதில்லை, சத்தான உணவைத்தான் உட்கொள்கிறார், அவரது பரம்பரையில் யாருக்கும் சர்க்கரை நோய் இல்லை, இனிப்பு உண்ணும் பழக்கமும் கிடையா

ஏன் சர்க்கரை நோய் வந்தது என ஆராய்ந்ததில், அதிகப்படியான கலோரி உணவுகளே காரணம் என தெரியவந்தது.

குறைவான கலோரிகள் கொண்ட உணவை எடுத்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு குறைந்துவிடும் என மருத்துவர்கள் கூறவே, அதுதொடர்பான ஆராய்ச்சியில் இறங்கினார் ரிச்சர்ட்.

இதன்படி தினமும் 800 கலோரிகள் கொண்ட உணவை மட்டுமே சாப்பிட்டு வந்தார்,

600 கலோரிகள் கொண்ட பழச்சாறு, கீரை வகைகள்
200 கலோரிகள் கொண்ட பச்சை காய்கறிகள்
மூன்று லிட்டருக்கு மிகாமல் தண்ணீர்

இதை தினந்தோறும் பின்பற்றவே வெறும் 11 நாட்களில் சர்க்கரையின் அளவு பழைய நிலைக்கு திரும்பிவிட்டது.

முறையான உணவு பழக்கத்தின் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்திய ரிச்சர்டு சர்க்கரை நோயாளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

SHARE