வெற்றிகரமாக நடந்தேறிய 7வது நோர்வே தமிழர் விருது விழா

251

வெற்றிகரமாக நடந்தேறிய 7வது நோர்வே தமிழர் விருது விழா - Cineulagam

தென்னிந்திய கலைஞர்கள் மட்டுமல்லாது ஈழத்துக் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் தமிழர் விருது விழா 6 வருடங்களாக நடைபெற்று வருகிறது.

7வது முறையாக இந்த வருடமும் இவ்விழா மிகவும் வெற்றிகரமாக நோர்வேயின் ஓஸ்லோ நகரில் அரங்கேறியுள்ளது.

இதில் உலகெங்கும் உள்ள சிறந்த குறும்படங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 குறும்படங்கள் திரையிடப்பட்டன. இவ்விழாவின் ஒரு அங்கமான Midnight Sun Singer என்ற பாடல் நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கர் புகழ் நிரூஜனின் பாடல் அனைவரையும் கவர்ந்தது. பிரான்ஸ், கனடா, பாகிஸ்தான், மலேசியா, இந்தியா, ஜெர்மனி என பல நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வெற்றிகரமாக இவ்விழா நடைபெற உதவிய லங்காசிறி, சினிஉலகம் உட்பட ஊடகங்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் தனது நன்றியை தமிழர் விருது விழாவின் இயக்குனர் வசீகரன் சிவலிங்கம் தெரிவித்துக் கொண்டார்.

8வது நோர்வே தமிழர் விருது விழாவுக்கான அடிப்படை வேலைகளும் தற்போதே தொடங்கி விட்டது எனவும் கூறினார்.

SHARE