வெற்றிமாறனின் புதிய படத்தில் மீண்டும் ஹீரோவாகும் சூரி.. படத்தின் டைட்டில் என்ன தெரியுமா

109

 

நகைச்சுவை நடிகராக என்ட்ரி கொடுத்து விடுதலை படம் மூலம் ஹீரோவாகவும் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்தார் சூரி.

விடுதலை முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

விடுதலை படத்தை தொடர்ந்து கொட்டுக்காலி எனும் படத்தில் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

புதிய படம்
இந்நிலையில், வெற்றிமாறன் கதையில் உருவாகும் புதிய படத்திலும் சூரி ஹீரோவாக நடிக்கவுள்ளார். கருடன் எனும் தலைப்பிட்டுள்ள இப்படத்தை பிரபல இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கோடி, எதிர்நீச்சல் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

மேலும், இப்படத்தில் சசி குமார் மற்றும் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார்கள்.. இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

SHARE