அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது.
பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் சிறுத்தை சிவா இயக்கத்தில் தான் நடிக்க போகிறார் என ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது.
அஜித் – ஆதிக்
ஆனால், அந்த கூட்டணி இப்போ கிடையாது, அஜித்தின் தீவீர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்துடைய 63வது படத்தை இயக்க போகிறார் என நேற்று தகவல் வெளிவந்தது.
இப்படத்திற்காக நடிகர் அஜித் சுமார் ரூ. 170 கோடி வரை சம்பளம் வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் AK 63 படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் AK 64 படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
AK 64
அஜித்தின் AK 64 படத்தை வெற்றிமாறன் இயக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.