ஐபிஎல் தொடரில் நான்கு சதத்துடன் 919 ஓட்டங்கள் குவித்து பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற முக்கிய காரணமான அந்த அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனது வெற்றியின் ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டிற்கு அடிமையாகி களத்தில் அமைதியை கடைப்பிடித்ததும் மற்றும் உலக ரசிகர்களின் ஆதரவுமே தனது ஐபிஎல் தொடரின் வெற்றி பயணத்திற்கு காரணம் என கோஹ்லி தெரிவித்துள்ளார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பேசிய பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி, களத்தில் நமது திறமையை பற்றி ஆணவமாகவோ அல்லது நாகரிகமற்ற முறையிலோ சிந்திப்பதை தவிர்க்க வேண்டியது மிக முக்கியம்.
போட்டியின் போது என்ன நடந்தாலும் அமைதியை பின்பற்றுவது நல்லது, இது அனைத்து வீரர்களுக்கும் பொருந்தும், நமது திறமையின் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டியது முக்கியம்.
அதீத நம்பிக்கைக்கும், தன்னம்பிக்கைக்கும், அமைதிக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு வைத்து செயல்படுவதே நமது திறமை என கோஹ்லி கூறியுள்ளார்.