வெற்றியை கொண்டாடும் வீரர்கள்! அசத்தல் புகைப்படங்கள் வெளியானது

292

625.500.560.350.160.300.053.800.748.160.70

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் கரீபியன் தீவில் பல இடங்களுக்கு சென்றுபொழுதை கழித்து வருகின்றனர்.

அதில் ஒரு பகுதியாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் வீடியோ கேம் விளையாடுவது போன்ற புகைப்படத்தை ஷிகர் தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.

அதில் இரட்டை சதம் அடித்த அணியின் தலைவர் கோஹ்லி, புஜாரா, ஷர்டுல் தக்கர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் ஆகியோர் Play Station ல் கேம் விளையாடுவது போன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவுடனான போட்டோவையும் பதிவு செய்துள்ளார்.

Relaxing & enjoying the greenery and fresh air with @imjadeja! Rest is the best!!???

இந்திய அணியின் மற்றோரு தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா அவர் எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

ரோஹித் ஷர்மா மேற்கிந்திய தீவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அணியின் தலைவர் வீராட்கோஹ்லி, தவான், ராகுல், பின்னி, விஜய் உணவகத்திற்கு சென்றிருப்பதை போன்ற புகைப்படத்தை கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Had a great meal with these champions! Sunglasses game on point here ?
Good friends create good memories!

SHARE