வெற்றியை நோக்கி இங்கிலாந்து போராடும் வங்கதேசம்

174

625-500-560-350-160-300-053-800-748-160-70-3

இங்கிலாந்து வங்கதேச அணிகளுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெரும் நிலையில் ஆடி வருகிறது.

வங்கதேசத்தில், இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அண்யும், இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணியும் வெற்றி பெற்றது.

இவ்விரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாங்காங்கில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் முதலில் துடுப்பேடுத்தாடிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால், இம்ரால் கேய்ஸ் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். தமிம் இக்பால்(45), கேய்ஸ்(46) ஒட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதற்கு அடுத்த படியாக வந்த சபீர்ரஹ்மான், முஸ்தபீர் ரகீம்மின் சிறப்பான ஆட்டத்தால் வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் எடுத்தது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக ரகீம் 67 ஓட்டங்களும், ரஹ்மான் 49 ஓட்டங்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அடில் ராசித் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கடின இலக்கை துரத்துவதற்காக இங்கிலாந்து அணி தரப்பில் துவக்க ஆட்டக்காரர்களாக வின்சும், பில்லிங்ஸ்சும் களமிறங்கினர். துவக்கத்தில் இருந்தே அதிரடி காட்டிய வின்ஸ் 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடி வரும் பில்லிங்ஸ் அரைசதம் கடந்து 54 ஓட்டங்களுடன் விளையாடி வருகிறார்.

சற்று முன் வரை இங்கிலாந்து அணி 22 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களுடன் விளையாடி வருகிறது.

28 ஓவர்களுக்கு 160 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்படுவதால், கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ள நிலையில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதே சமயம் வங்கதேச அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

SHARE