வெற்றி கோல் அடித்த ரொனால்டோ: 11வது முறையாக கிண்ணத்தை வென்றது ரியல் மேட்ரிட்!

278

இத்தாலியின் மிலன்நகரில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பெனால்ட்டி முறையில் ரியல் மேட்ரிட் அணி 5-3 என்ற கோல் கணக்கில் அட்லெட்கோ மேட்ரிட் அணிய வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இதன் மூலம் ரியல் மேட்ரிட் அணி 11வது முறையாக கிண்ணத்தை வென்று சாதித்துள்ளது.

கடந்த 1956ல் ஐரோப்பியன் சாம்பின்ஸ் கிளப்ஸ் என்ற பெயரில் துவங்கப்பட்டு, பின் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரானது, இத்தொடரில் ஐரோப்பிய நாடுகளின் கிளப் அணிகள் மட்டும் பங்கேற்கும் என்பது நினைவுக்கூரத்தக்கது.

மிலன் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் ஸ்பெயினை சேர்ந்த ரியல் மேட்ரிட், அட்லெட்கோ மேட்ரிட் அணிகள் மோதின.

ரியல் மேட்ரிட் அணியின் கேப்டன் செர்கியோ ரமோஸ் 15வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார், எனினும் போட்டியின் 79-வது நிமிடத்தில் அட்லெட்டிகோ அணியின் யானிக் கர்ராஸ்கோ தனது அணிக்காக ஒரு கோலை அடித்துள்ளார்.

கூடுதல் நேரம் வழங்கப்பட்ட நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதனை தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் இரு அணிகளுக்கும் கோல் அடிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டன. இதில் வெற்றிக்கான கோலை ரியல்அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்துள்ளார்.

ரியல் மேட்ரிட் அணி 5-3 என்ற கோல் கணக்கில் அட்லெட்டிகோவை வெற்றி பெற்று கிண்ணத்தை தட்டி சென்றது. கோல் அடித்து அணியின் வெற்றியை தக்க வைத்ததை அடுத்து தனது சட்டையை கழற்றி ரொனால்டோ மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

SHARE