வெலிக்கடை சிறைச்சாலை மாற்றம்

239

வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணை பகுதியில் அமைப்பது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது.

அமைச்சரவை அனுமதிக்கிடைக்கபெற்றதன் பின்னர் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளது.

ஹொரணை சொரணவத்தை பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது.

இதேவேளை புதுக்கடை நீதிமன்றத்திற்கு அண்மையில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிகமாக கைதிகளை தடுத்து வைப்பதற்கு தடுப்பு நிலையம் ஒன்று அமைக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.welikada

SHARE