வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் 4 அரசியல்வாதிகள்! ஆபத்தான கட்டத்தில் 

222

images-113

பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தண்டை பெற்று அல்லது சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலையில் உள்ள அரசியல் முக்கியஸ்தர்கள் நான்கு பேர் தற்போது வரையில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா அவர்களில் ஒருவராகவும். காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

துமிந்த சில்வா ஞாபக மறதி மற்றும் நுரையீரல் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜயந்த சமரவீர விளக்கமறியலில் வைக்கப்பட்ட அன்றைய தினமே வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவும் அதே நோயில் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். அதற்கமைய அவர் தற்போதுவரையில் வெலிக்கடை சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தேயின் சகோதரரான சானுக ரத்வத்தே வெலிக்கடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் உயர் கொழுப்பு மற்றும் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவர்களின் பரிந்துரைகளுக்கமைய குறித்த 4 பேரும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

SHARE